/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சவுக்கு சங்கர் ஜாமின்மே 30க்கு ஒத்திவைப்பு
/
சவுக்கு சங்கர் ஜாமின்மே 30க்கு ஒத்திவைப்பு
ADDED : மே 28, 2024 03:37 AM
மதுரை : சென்னையை சேர்ந்தவர் யுடியூபர் சவுக்கு சங்கர். தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது காரில் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு மீது பழனிசெட்டி பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.
கைதான சவுக்கு சங்கரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஜூன் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அவர் அதே நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி செங்கமலச்செல்வன் ஏற்கனவே ஒத்திவைத்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் தரப்பில் அவரது வழக்கறிஞர் காலஅவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை மே 30க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.