/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை பெண்ணுக்கு முதல்வர் வாழ்த்து
/
மதுரை பெண்ணுக்கு முதல்வர் வாழ்த்து
ADDED : மார் 03, 2025 04:49 AM
மதுரை: மதுரை திருவேடகத்தைச் சேர்ந்த மனோகரன் மகள் ஷோபனா. சில ஆண்டுகளுக்கு முன் பிளஸ்2 படித்து முடித்தார். ஏழ்மை நிலையில் உள்ளதால், மேற்படிப்புக்கு உதவும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை பார்த்த முதல்வர் அவருக்கு உதவும் வகையில் மதுரை அரசு மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் சேர ஏற்பாடு செய்தார்.
அதன்பின் மதுரை வந்த முதல்வரை நேரில் சந்தித்து தனது உயர்கல்விக்கு உதவியதற்கு ஷோபனா நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் பி.பி.ஏ., படித்து முடித்தார். அதன்பின் மீண்டும் தனது உயர்கல்வி படிப்பு முடிந்ததற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து அப்பெண்ணுக்கு தொழிலாளர் நலத்துறையில் (சமூகநலப் பாதுகாப்பு பிரிவு) கணினி ஆப்பரேட்டராக பணியாற்ற வாய்ப்பளித்தார்.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு தண்டலை வீரமணி கார்த்திக் என்பவருடன் நேற்று மதுரை பூங்கா முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. தனது திருமணம் குறித்து அழைப்பிதழை முதல்வருக்கு அனுப்பியிருந்த ஷோபனா, வாழ்த்தும்படி தெரிவித்து இருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்துடன் சென்ற அமைச்சர் மூர்த்தி மணமக்களை வாழ்த்தினார். மக்கள் தொடர்பு அதிகாரி சாலிதளபதி உட்பட பலர் பங்கேற்றனர்.