நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் சிசு உற்ஸவ விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் சசிரேகா தலைமை வகித்தார். ஹார்விபட்டி அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கீதா துவக்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட கே.ஜி., குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.