ADDED : ஜூன் 22, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரயில்வே காலனி இருதய ஆண்டவர் சர்ச் திருவிழாவை தெற்கு மறைவட்ட அதிபர் பாதிரியார் அமல்ராஜ் கொடியேற்றி துவக்கிவைத்தார். நாளை(ஜூன் 23) தேர் பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் தேவதாஸ் செய்து வருகிறார்.
அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 26 மாலை பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. ஜூன் 29ல் தேர் பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் அருள் சேகர் செய்து வருகிறார்.
பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் துாய பவுல் சர்ச் திருவிழாவை சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் துவக்கி வைத்தார். ஜூன் 29ல் தேர் பவனி நடக்கிறது.
ஜூன் 30 கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை பாதிரியார் ஜெயராஜ் செய்து வருகிறார்.