/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உலகுபிச்சன்பட்டியில் உயிரை பணயம் வைக்கும் பொதுமக்கள்
/
உலகுபிச்சன்பட்டியில் உயிரை பணயம் வைக்கும் பொதுமக்கள்
உலகுபிச்சன்பட்டியில் உயிரை பணயம் வைக்கும் பொதுமக்கள்
உலகுபிச்சன்பட்டியில் உயிரை பணயம் வைக்கும் பொதுமக்கள்
ADDED : பிப் 23, 2025 06:28 AM

மேலுார்: உலகுபிச்சன்பட்டியில் ரேஷன் கடை முற்றிலும் சிதிலமடைந்துள்ளதால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
இந்த ரேஷன் கடையில் வெள்ள முத்தன்பட்டி, புதுப்பட்டி உள்பட 4 கிராமங்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு 2004ல் ரேஷன் கடை கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாமல் தரைத் தளம், மேற்கூரை என கட்டடம் முழுவதும் சிதிலமடைந்துள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது: கடையின் கூரை, சுவரில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன. இதனால் மழைநீர் கசிந்து பொருட்கள் நனைந்து வீணாகிறது. தரைத்தளம் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே நீண்டுள்ளதால் இங்கு வருவோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். கூரை வளைந்து காணப்படுவதோடு சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. ரேஷன் பொருட்கள் வாங்க உயிரை பணயம் வைக்கும் அளவு அபாயம் உள்ளதால் பொது வினியோக அதிகாரிகள் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றனர்.
வட்ட வழங்கல் அலுவலர் விவேகானந்தன் கூறுகையில், ''கட்டட பாதிப்பு குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்யப்படும் என்றார்.

