/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சவுராஷ்டிரா கல்லுாரியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்
/
சவுராஷ்டிரா கல்லுாரியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்
சவுராஷ்டிரா கல்லுாரியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்
சவுராஷ்டிரா கல்லுாரியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்
ADDED : ஜூலை 27, 2024 06:16 AM

திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி சார்பில் மீனாட்சி கார்ப்பரேஷன் நிறுவனர் நினைவு கோப்பை
கல்லுாரிகளுக்கிடையிலான மாநில கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்து முதல் போட்டியை துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் சீனிவாசன், ஜிம்கானா கிளப் ஜோதிநாத் பிறபோட்டிகளை துவக்கினர்.
நாக் அவுட் முறையில் நடக்கும் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 கல்லுாரி அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலை அணியினர் 55 - 17 என்ற வித்தியாசத்தில் மதுரை விவேகானந்தா கல்லுாரி அணியை வென்றனர். இரண்டாவது போட்டியில் மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி அணியினர் 47-25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மதுரை விவசாய கல்லுாரி அணியை வென்றனர்.
மூன்றாவது போட்டியில் மதுரை தியாகராஜர் கலைக்கல்லுாரி அணியினர் 36 - 30 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி அணியை வென்றனர். நான்காவது போட்டியில் விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லுாரி அணியினர் 53 - 34 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி அணியை வென்றனர். சவுராஷ்டிரா கல்லுாரி முன்னாள் முதல்வர் ரவீந்திரன், போட்டி ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் கலந்து கொண்டனர். இன்றும் போட்டிகள் நடக்கிறது.