ADDED : ஆக 26, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருமங்கலம் லீ சாம்பியன் மார்சியல் ஆர்ட்ஸ் மற்றும் இந்தியன் சிலம்ப பள்ளி இணைந்து நடத்திய சிலம்பப் போட்டி திருமங்கலம் தனியார் பள்ளியில் நடந்தது.
மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகச் செயலாளர் மணி தொடங்கி வைத்தார். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி முன்னிலை வகித்தார். உலக சொக்காட்டான் கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா துணைத் தலைவர் அவனமுத்து வரவேற்றார். பி.கே.என்., ஆண்கள் பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயசாந்தினி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருமங்கலம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. உலக சொக்காட்டான் கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா பொருளாளர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

