/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர்
/
ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர்
ADDED : ஜூலை 11, 2024 05:24 AM
மதுரை: ஊரக பகுதிகளில் இன்று முதல் (ஜூலை 11) ஆக.14 வரை 'மக்களுடன் முதல்வர்' சேவை முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
தமிழக அரசு சார்பில், நகர், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு, ஊராட்சி அளவில் ஒரே குடையின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பரில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகள் பகுதிகளில் 97 முகாம்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து 2ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தற்போது 395 ஊராட்சிகளில் 73 முகாம்கள் இன்று (ஜூலை 11) முதல் ஆக.14 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 15 அரசு துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இணையவழி விண்ணப்ப முறை என்றால், சம்பந்தப்பட்ட துறைகளின் முகாமிலேயே விண்ணப்பத்தை இணைய வழியில் பதிவேற்றம் செய்வது மற்றும் சேவைகளுக்கு ரூ.50 சதவீத கட்டணமே பெறப்படும். இன்று மதுரை கிழக்கு கள்ளந்திரி ஊராட்சியில் மக்களுடன் துவக்க விழா மீண்டும் துவங்குகிறது என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.