/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண் கொலை கூட்டுறவு ஊழியர் சிக்கினார்
/
பெண் கொலை கூட்டுறவு ஊழியர் சிக்கினார்
ADDED : ஆக 07, 2024 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலைமான்:சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரைச் சேர்ந்த 47 வயது பெண். ஜூலை 4ல், மதுரை சிலைமான் அருகே தோப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக இடைக்காட்டூர் அருகே அன்னியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர் இளங்கோவன், 55, கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஆறு ஆண்டுகளாக இருவருக்கும் தொடர்பு இருந்த நிலையில், இளங்கோவனிடம் அப்பெண் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார். சம்பவத்தன்று இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில் அப்பெண்ணை சுவரில் முட்டச்செய்தும், கட்டையால் அடித்தும் இளங்கோவன் கொலை செய்துள்ளார்' என்றனர்.