/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு
/
பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 11, 2024 06:00 AM

திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அச்சம்பட்டி, நடுவக்கோட்டை, கிழவனேரி ,பெரிய வாகைகுளம், சின்ன வாகைகுளம் ,பொன்னமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விருதுநகர் லோக்சபா பா.ஜ., வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து சரத்குமார், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சரத்குமார் பேசியதாவது:
எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வாழ்வாதாரத்தை அளிப்பதற்காக மிகச் சிறந்த ஆட்சியை மோடி தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். ஆயிரம் ரூபாய் கொடுத்ததால் தான் பெண்கள் பளபளப்பாக மேக்கப் போட்டு வருகின்றனர் என கூசாமல் பேசி வருகின்றனர். அதுபோன்ற ஆட்களை பொதுமக்கள் ஆதரிக்காமல் இருக்க வேண்டும் என்றார். திருமங்கலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சக்திவேல், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

