நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மேற்கு தாலுகா சுப்ரமணியபுரம் பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார்.
கம்பர் மாநகராட்சி பள்ளி ஆய்வில் அவருடன் உதவி கலெக்டர் (பயிற்சி) வைஷ்ணவி பால் பங்கேற்றார். நல்லமுத்து காலனி பகுதி ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு, வினியோகம் குறித்து கேட்டறிந்தார். சம்மட்டிபுரம் பிள்ளைமார் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமை ஆய்வு செய்தார். நாகமலைபுதுக்கோட்டை, அச்சம்பத்து கால்நடை மருந்தகத்தில் டாக்டர்கள், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளிடம் குறைகளை கேட்டார்.