ADDED : ஜூலை 05, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் அரசு கல்லுாரியில் கடந்த கல்வி ஆண்டில் இளநிலை, முதுநிலை படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா முதல்வர் பாண்டிமாதேவி தலைமையில் நடந்தது.
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு 627 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். அதில் கொட்டாம்பட்டியில் அரசு மகளிர் கல்லுாரி கொண்டுவர முயற்சி செய்யப்படும். இத்தொகுதியில் கல்விக் கடன், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றார். விழாவில் கல்லாணை எம்.எல்.ஏ., கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
