ADDED : ஆக 22, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் ஸத்குரு ஸங்கீத ஸமாஜம் சார்பில் மக்களை மகிழ்விக்க ஆக.,24, 25ல் இரு நாடகங்கள் நடக்கின்றன.
ஆக.,24 மாலை 6:30 மணிக்கு டிவி வரதராஜன் நடிக்கும் 'காசளவு நேசம்' நாடகம் நடக்கிறது.
இன்றைய உலகில் வாழ்வதற்கு தேவை பணமா, மனிதர்களா என்ற மையக் கருத்தை நகைச்சுவையுடன் காட்சிப்படுத்த உள்ளனர்.
எழுதி, இயக்குபவர் வேதம் புதிது கண்ணன்.ஆக.,25 மாலை 6:30 மணிக்கு காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும் 'ஜுகல்பந்தி' நாடகம் நடக்கிறது. குடும்பப் பின்னணியில் நகைச்சுவை கலந்த இந்நாடகத்தை எழுதி, இயக்குபவர் எஸ்.எல்.நாணு.இவ்விரு நாடகங்களுக்கும் அனுமதி இலவசம்.