/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாழைக்கு இழப்பீடு: அறிக்கை தயார் நிவாரணம் குறைவு: விவசாயிகள் புகார்
/
வாழைக்கு இழப்பீடு: அறிக்கை தயார் நிவாரணம் குறைவு: விவசாயிகள் புகார்
வாழைக்கு இழப்பீடு: அறிக்கை தயார் நிவாரணம் குறைவு: விவசாயிகள் புகார்
வாழைக்கு இழப்பீடு: அறிக்கை தயார் நிவாரணம் குறைவு: விவசாயிகள் புகார்
ADDED : மே 16, 2024 05:47 AM

மதுரை : மதுரையில் சமீபத்திய மழை மற்றும் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு பெறுவதற்கான அறிக்கை தயாரித்து சென்னைக்கு அனுப்பியுள்ள நிலையில்குறைந்தளவு நிவாரணம்தரப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரலில் பெய்த மழையால் வாடிப்பட்டி, அலங்காநல்லுார், மேலுார், திருப்பரங்குன்றம் பகுதியில் நடப்பட்டிருந்த 18 விவசாயிகளின் 7 எக்டேர் பரப்பில் வாழைக்கன்றுகள் சாய்ந்தன.
சமீபத்திய மழை, சூறைக்காற்றிலும் உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி 25 எக்டேரில் 59 விவசாயிகள் நடவு செய்திருந்த வாழைக்கன்றுகளும், அலங்காநல்லுாரில் பப்பாளி கன்றுகளும் சாய்ந்தன.
ஏப்ரல், மே பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறை சார்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.பாசன வசதியுள்ள தோட்டங்களில் பாதித்த பப்பாளி, வாழைக் கன்றுகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வீதம் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
வாழை விவசாயிகள் கூறியதாவது:
கடந்தாண்டில் இழப்பீடாக எக்டேருக்கு ரூ.13ஆயிரத்து 500 வழங்கினர். ஒரு ஏக்கரில்வாழைக்கன்று குழியெடுக்க, நடவு செய்ய, உரம், கன்று வாங்க குறைந்தது ரூ.80 ஆயிரம் வீதம் ஒரு எக்டேருக்கு ரூ.2லட்சம் செலவாகிறது.
பல மடங்கு செலவு செய்த பயிருக்கு நிவாரணமாக எக்டேருக்கு ரூ.17ஆயிரம் தருவது மிகக் குறைவு. இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.