ADDED : ஜூலை 16, 2024 04:19 AM
திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தேசிய தர மதிப்பீட்டு குழு சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் முகாம் நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். கல்லுாரி தேசிய மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் விமலா வரவேற்றார்
செயலாளர் விஜயராகவன் பேசுகையில், ''மாணவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாக, மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஒழுக்கம் நிறைந்த, மனிதநேயம் மிக்கவர்களாக விளங்க வேண்டும்'' என்றார். டீன்கள், துறைத் தலைவர்கள், நுாலகர், தேர்வாணையர், உடற்கல்வி இயக்குனர், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள், என்.சி.சி., அலுவலர் பேசினர். உதவி ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
