ADDED : மார் 10, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் மூக்குச்சாலை முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை குறுகிய சாலையால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பேரையூரில் இருந்து தேனி, ராஜபாளையம், மதுரை விருதுநகர், வத்திராயிருப்பு பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் செல்கின்றன. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் பஸ்கள் குறுகிய சாலையால் திணறி வருகின்றன. ஆக்கிரமிப்பால் ரோடுகள் குறுகியதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
நெரிசல் ஏற்பட்டால் வேறு எந்த மாற்று வழியும் இல்லாத நிலையில் பஸ்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்தச் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.