ADDED : ஜூலை 22, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக வடக்கு மாவட்ட காங்., சார்பில் டில்லியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் நுார்முகமது தலைமை வகித்தார். மாநில ஓ.பி.சி., அணி வழக்கறிஞர் பிரிவு நித்திய பிரியா, வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு, காந்திஜி முன்னிலை வகித்தனர். மகிளா காங்.,மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ஜெயமணி, இளைஞர் காங்., தலைவர் மணிவண்ணன், செய்தி பிரிவு கவுதம் பாலா, மனித உரிமை துறை முன்னாள் தலைவர் முத்து, மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், நகரத் தலைவர்கள் முருகானந்தம் முத்துப்பாண்டி, சங்கர பாண்டி பங்கேற்றனர்.
