ADDED : ஆக 05, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தங்கப்பல் அழகர்சாமி லட்சுமி அம்மாள் சமூகநல நுகர்வோர் விழிப்புணர்வு மையத்தில் செயற்குழு கூட்டம் தலைவர் சுப்புராம் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, அங்குசாமி, ராஜசேகரன், துளசிராமன், லாவண்யா முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஏ.பி.குமார், செயலாளர் கண்ணன் உட்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் மதுரை நகரில் குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளை சரிசெய்ய வேண்டும். பாதாள சாக்கடை மூடிகளை உயர்த்தியதால், விபத்தை ஏற்படுத்தும் வகையில் கிடக்கும் பாதாள சாக்கடை மூடிகளை அப்புறப்படுத்த வேண்டும். மோசமான அரசு பஸ்களை நிறுத்திவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும். மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.