ADDED : ஜூலை 02, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : மத்திய அரசு அமல்படுத்திய 3 சட்ட திருத்தங்களை வாபஸ் பெறக்கோரி திருமங்கலம் வக்கீல் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்றம் புறக்கணிப்பு நடந்தது.
தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒரு வாரம் தொடர் புறக்கணிப்பில் ஈடுபடுவது, ஜூலை 2ல் ஆர்ப்பாட்டம், ஜூலை 4ல் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது. துணைத் தலைவர் கண்ணன், இணைச் செயலாளர் விஜய், பொருளாளர் தினேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி-: உசிலம்பட்டியில் நடந்த புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ராம்குமார், பொருளாளர் விக்னேஷ்குமார், வக்கீல்கள் கணேசன், சொக்கநாதன், வினோதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.