ADDED : ஜூன் 28, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மனநலத்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம், தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு நடந்தது. டீன் தர்மராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மனநலத்துறைத் தலைவர் கீதாஞ்சலி, பேராசிரியை அமுதா ஏற்பாடுகளை செய்தனர்.
துணைமுதல்வர் மல்லிகா, மருத்துவ கண்காணிப்பாளர் செந்தாமரை, ஆர்.எம்.ஓ.,க்கள் ஸ்ரீலதா, சரவணன், டாக்டர்கள் கவிதா, கார்த்திக், அருண் பிரசன்னா, சண்முகப்ரியா, பிரபா சாமிராஜ் கலந்து கொண்டனர். போதைப்பொருட்களை நுகர்வதும், முன்கூட்டியே தடுப்பதும் குறித்து டாக்டர் கிருபாகர கிருஷ்ணன், ஆல்கஹால் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் டாக்டர் தீபா கருத்தரங்க அமர்வுகளில் பேசினர்.