ADDED : ஜூலை 22, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்க வளாகத்தில், தமிழ் இயற்கை நல்வாழ்வியல் மையம் சார்பில் இலவச மரபுவழி மருத்துவ முகாம் நடந்தது.
சங்கத் தலைவர் ராகவன் தலைமை வகித்தார். செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார். அடிப்படை உடல் உபாதைகளுக்கு மைய பொறுப்பாளர் ஜான்சன் மரபுவழி மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வையும், மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கினார்.
சங்க துணைத் தலைவர் ரகுபதி, பொருளாளர் காசி, உறுப்பினர்கள் நரசிம்மராஜ், திரவியம் பங்கேற்றனர்.