/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் மின்சாரம் தாக்கி தம்பதி பலி
/
மழையால் மின்சாரம் தாக்கி தம்பதி பலி
ADDED : மே 11, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை டி.வி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் முருகேசன் 50. இவரது மனைவி பாப்பாத்தி 44. இருவரும் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தனர். நேற்று மாலை மதுரை நகர் முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததில் டி.வி.எஸ்., நகரில் தெருவிளக்கு மின் ஒயர் அறுந்து தொங்கியது.
கடையை பூட்டிவிட்டு இரவு 9:30 மணிக்கு இருவரும் டூவீலரில் வீட்டிற்கு புறப்பட்டனர்.இவர்களது மகன் சைக்கிளில் முன்னால் சென்றார். வழியில் மின் ஒயர் அறுந்து கிடந்ததை பார்த்து பெற்றோரிடம் அதுகுறித்து தகவல் தெரிவிப்பதற்கு முன்னதாகவே, அந்த இடத்தை அவர்கள் கடந்தபோது டூவீலரில் ஒயர் பட்டதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.