/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குற்றாலநாத சுவாமி கோயில் குத்தகை பாக்கி வசூலிக்க நடவடிக்கை அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

ADDED : செப் 03, 2024 05:58 AM
மதுரை : தென்காசி மாவட்டம் குற்றாலத்திலுள்ள குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு குத்தகை பாக்கியை வசூலிக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து செயல் அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, 'குற்றாலத்தில் சீசனின்போது சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அருவிகளில் நீராடுகின்றனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அவற்றை நிறைவேற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என 2014 ல் பொதுநல மனு செய்தார்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை அவ்வப்போது உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்தது.
2024 பிப்ரவரியில் விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 'அடுத்த சீசன் காலகட்டத்தில் நடைபாதைகளில் கடைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது,' என உத்தரவிட்டது.
நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: குற்றாலம் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து ஆய்வு செய்து பொதுப்பணித்துறையின் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றாலநாதசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான சொத்துக்களை அனுபவித்து வருவோரிடம் நிலுவையிலுள்ள குத்தகை பாக்கியை வசூலிக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து செயல் அலுவலர் செப்.,30ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.