ADDED : ஜூன் 12, 2026 09:40 PM
வாடிப்பட்டி: இரும்பாடியில் நெற் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள, விவசாயிகள் இணைப்பை வலுப்படுத்தும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் பாண்டி வேளாண் துறை திட்டங்கள், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்ட அவசியம் பற்றி கூறி அதில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்ய கேட்டுக் கொண்டார். வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ஆனந்த், நெல்லில் புதிய ரகங்களை சாகுபடி செய்தல், தேவையான உரங்களை பயிர்களின் நிலைக்கு ஏற்ப பயன்படுத்தும் முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினார்.
வேளாண்மை அலுவலர் தீபஞான சுந்தரி, இடுபொருட்கள் குறித்தும், உதவி வேளாண் அலுவலர் விக்டோரியா செலஸ் விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் பதிவின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். தொழில்நுட்ப மேலாளர் பிரியா நன்றி கூறினார்.
