ADDED : மே 31, 2024 05:29 AM
மதுரை : மதுரை நகரின் பல ரோடுகளில் மணல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
நகரின் பல பகுதிகளிலும் ரோடுகளில் மணல் குவியல் கிடக்கிறது. அவ்வப்போது மாநகராட்சி அப்புறப்படுத்தி வருகிறது. இருப்பினும் வாகன பெருக்கம் அதிகரித்து விட்டதால் மணல் சேர்வதை தவிர்க்க இயலவில்லை. மணல் குவியலால் ரோட்டோரம் செல்லும் வாகனங்கள் சிக்கி விபத்தை சந்திக்க ஏதுவாகின்றன. குறிப்பாக டூவீலர்களில் செல்வோர் 'பாலன்ஸ்' தவறி விழுந்து காயமடைகின்றனர். நெரிசலான பகுதியில் பிற வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபரீதத்தை சந்திக்கும் அளவு போய்விடுகிறது.
மதுரை பைபாஸ் ரோட்டில் போடி லைன் ரயில்வே மேம்பாலம், மேலவெளிவீதி, ரயில்வே ஸ்டேஷன் முதல் வடக்குவெளி வீதி வரையான ரோட்டோரம் மணல் குவிந்துள்ளது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.