ADDED : ஜூன் 17, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார்- - பாலமேடு மெயின் ரோட்டில் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம் உள்ளது.
இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சின்ன பாலமேடு பிரிவு, சுக்காம்படி, தேவசேரி பிரிவுகளில் ரோட்டோரம் பட்டுப்போன நிலையில் பலமரங்கள் உள்ளன. சமீபத்தில் வீசிய காற்றுக்கு இந்த மரங்களின் காய்ந்த கிளைகள் முறிந்து ரோட்டில் விழுந்தன, மின் ஒயர்களில் தொங்குகின்றன.
இவை வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதால், விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. காற்று, மழை நேரங்களில் கிளைகள் முறிந்து ரோட்டில் விழுவதால் டூவீலரில் செல்வோர் காயமடைகின்றனர். விபத்து ஏற்படுத்தும் வகையில் நிற்கும் இற்றுப்போன மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.