/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டாக்டர் சரவணன் தாயார் மரணம் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
/
டாக்டர் சரவணன் தாயார் மரணம் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
டாக்டர் சரவணன் தாயார் மரணம் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
டாக்டர் சரவணன் தாயார் மரணம் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
ADDED : ஜூன் 07, 2024 06:22 AM
மதுரை: அ.தி.மு.க., மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணனின் தாயார் அங்கம்மாள் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தொலைபேசி மூலம் டாக்டர் சரவணனை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், டாக்டர் சரவணன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், தாயார் அங்கம்மாள் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுவதாகவும்'' தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.,க்கள் பெரியபுள்ளான், தேனி தொகுதி வேட்பாளர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், தவசி, மாணிக்கம், கருப்பையா உட்பட அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அங்கம்மாள் உடல் தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டது.