/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அழகர்கோவிலில் தீர்த்தம் பற்றாக்குறை 5 கி.மீ., சென்று பிடித்து வரும் ஊழியர்கள்
/
அழகர்கோவிலில் தீர்த்தம் பற்றாக்குறை 5 கி.மீ., சென்று பிடித்து வரும் ஊழியர்கள்
அழகர்கோவிலில் தீர்த்தம் பற்றாக்குறை 5 கி.மீ., சென்று பிடித்து வரும் ஊழியர்கள்
அழகர்கோவிலில் தீர்த்தம் பற்றாக்குறை 5 கி.மீ., சென்று பிடித்து வரும் ஊழியர்கள்
ADDED : ஜூலை 24, 2024 08:54 PM
அழகர்கோவில்:மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ராக்காயி அம்மன் சன்னிதிக்கு கீழே, நுாபுர கங்கை தீர்த்தம் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்தத்தில் தான் தினமும் சுந்தரராஜ பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இனிப்புச்சுவை கொண்ட இத்தீர்த்தத்தை பயன்படுத்தியே அழகர்கோவிலின் புகழ்பெற்ற தோசை உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன.
மலை உச்சியில் உருவாகும் இத்தீர்த்தத்தை மலையடிவாரத்திலேயே கிடைக்கும் வகையில், கோவில் வளாகத்திற்கு வெளியே இரண்டும், உள்ளே பிரசாதம் தயார் செய்யும் இடத்திற்கு அருகே இரண்டு குழாய்கள் மூலம் மக்கள் பிடித்துச் செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக குழாய்களில் தீர்த்தம் வருவதில்லை. இதனால் பிரசாதம் தயார் செய்யவும், சுவாமிக்கு அபிஷேகம் செய்யவும், கோவில் ஊழியர்கள் 5 கி.மீ., மலை மீது டூ-வீலரில் சென்று தீர்த்தம் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரோடு பணியால் பாதிப்பு
கோவில் நிர்வாகம் சார்பில் கூறியதாவது:
மலை மீது நுாபுர கங்கையில் பக்தர்கள் நீராடுவதால் தண்ணீரின் வேகம் கீழ் வரை கிடைப்பதில்லை. மலை மீது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனால் அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தீர்த்தம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.

