ADDED : ஜூன் 16, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் வட்டார வேளாண் துறை சார்பில் அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் சின்ன இலந்தைகுளம், தண்டலை, அழகாபுரி, தேவசேரி, அ.கோவில்பட்டி விவசாயிகளுக்கு தக்கை பூண்டு வழங்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் மயில் வழங்கினார். தக்கை பூண்டை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் சமன் செய்யப்பட்ட வயலில் விதைத்து 45 நாட்களில் பூக்கும் தருணத்தில் டிராக்டர் கொண்டு மடக்கி உழவு செய்வதன் மூலம் தழைச்சத்து அதிகரிக்கும். மண் அரிப்பால் ஏற்படும் இழப்பினை அது குறைக்கும் என உதவி இயக்குனர் விளக்கினார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் நிர்மலா, வேளாண் அலுவலர் வசந்தகுமார், உதவி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.