ADDED : ஜூலை 31, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு சந்தாவை உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகபூப்பாட்ஷா தலைமை வகித்தார். நிர்வாகிகள் நமச்சிவாயம், மோகன், பழனிராஜ், ரகுநாதன், பாலகிருஷ்ணன், நடராஜன், முருகேசன், ஆலோசகர் வெங்கட கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
