/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அழகர்கோவிலுக்கு துணை கமிஷனர் நியமனம்
/
அழகர்கோவிலுக்கு துணை கமிஷனர் நியமனம்
ADDED : மார் 01, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு 7 மாதங்களுக்கு பிறகு துணைகமிஷனராக யக்ஞநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்கோயிலின் துணை கமிஷனராக இருந்த கலைவாணன் கடந்தாண்டு ஜூலை 31ல் ஓய்வு பெற்றார். அதன் பின் 7 மாதங்களாக அப்பதவி காலியாக இருந்தது. மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
மேலும் சித்திரைத்திருவிழா ஏப்.29ல் தொடங்குகிறது. இதன்காரணமாகவும், திருப்பணிகளை கவனிக்கவும் குற்றாலநாதர் கோயிலில் பணியாற்றிய யக்ஞநாராயணனுக்கு பதவி உயர்வு அளித்து இங்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயிலில் பணியாற்றியவர்.