ADDED : மே 16, 2024 05:36 AM
அலங்காநல்லுார் : மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் ஆர்த்திகா, அபிராமி, அபிஷா, அஜ்மியா, அக் ஷயா, அமுதரசி, ஆர்த்தி, ஆஷ்மி ஆகியோர் அலங்காநல்லுார் ஒன்றியத்தில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அய்யூரில் பந்தல் காய்கறிகளை தாக்கும் பழ ஈ மேம்பாடு குறித்தும், காய்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஈக்களை கவர்ச்சி பொறி வைத்தும், பீர்க்கங்காயை கவர்ச்சி பயிராக பயிரிட்டும் தடுக்கலாம். ரசாயனத்தை விட இயற்கை முறையில் கட்டுப்படுத்துவதால் சாகுபடி செலவை குறைத்து கட்டுப்பாட்டு திறனையும் அதிகரிக்கலாம் என விவசாயிகளுக்கு விளக்கினர்.
வாடிப்பட்டி ஒன்றியத்தில் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவிகள் காவியலட்சுமி, ஜெயதுர்காதேவி, அபிநயா, மரியஆன்சி, சர்மிலி, ராகவி, லாவன்யா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தில் பயிற்சி மற்றும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.