/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி
/
தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி
ADDED : ஜூன் 16, 2024 05:07 AM
மதுரை: மதுரை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான தேவாரம், திருவாசகம், சகலகலாவல்லி மாலை ஒப்புவித்தல் போட்டி திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில் ஜூலை 5ல்திருவாவடுதுறை ஆதின மடத்தில் காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
ஞானசம்பந்தர்,நாவுக்கரசர், சுந்தரர்அருளிய தேவாரப் பாடல்கள், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை ஆகியன ஒப்புவித்தல் போட்டிக்கு வைக்கப்பட்டுள்ளன.6, 7ம் வகுப்பு மாணவர்கள் சகலகலாவல்லி மாலை, சம்பந்தர், அப்பர் அருளிய தேவாரத்தில் ஏதாவது இரண்டு பதிகங்களும், 8, 9ம் வகுப்பு மாணவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர் அருளிய தேவாரபதிகங்களில் மூன்று ஒப்புவிக்க வேண்டும். 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேவாரம் ஒரு பதிகம், திருவாசகத்தில் சிவபுராணம், பொன்னுாசல் ஆகிய இரு பதிகங்கள், சகலகலாவல்லி மாலை ஆகியனஒப்புவிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 15 மாணவர்கள் மட்டுமே இப்போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். சிறந்த முறையில்ஒப்புவிக்கும் மாணவர்களை ஆசிரியர்களே தேர்வு செய்து அழைத்து வர வேண்டும்.நுழைவுக் கட்டணம் இல்லை. மேலும் விவரங்களுக்கு 94439 30540ல் தொடர்புகொள்ளலாம்.