/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி
/
தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி
ADDED : ஜூலை 07, 2024 02:19 AM
மதுரை: மதுரையில் திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேவாரம், திருவாசகம், சகலகலாவல்லி மாலை ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப்பள்ளி, மேலுார் ஆட்டுக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, டி.வி.எஸ். லட்சுமி பள்ளி, டி.வி.எஸ். சுந்தரம் பள்ளி, பாரதி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீராம் நல்லமணி மெட்ரிக் பள்ளி, ஓ.சி.பி.எம்., பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 112 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் தேவார திருவாசக பாடல்கள் போட்டிக்கு வைக்கப்பட்டன.
குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலையை மாணவர்கள் ஒப்புவித்தனர்.முழுவதுமாக ஒப்புவித்த 38 பேர் முதல் பரிசும், 28 பேர் இரண்டாம் பரிசும், 31 பேர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
அறங்காவலர்கள் மகேஸ்வரி, ரேவதி, பிரசன்னா நடுவர்களாக இருந்தனர். பரிசுகளை கயிலை மணி சோமசுந்தரர் ஓதுவார் வழங்கினார்.
ஏற்பாடுகளை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்சிவன், இளங்கோவன், நாராயணன் செய்தனர்.