ADDED : ஜூலை 07, 2026 04:40 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகளை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.
அங்கு பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தில் பழனிவேல்ராஜன் என்பவர் நிலத்தில் அமைத்துள்ள சொட்டுநீர் பாசன பணிகள், தோட்டக்கலை துறையில் விளைபொருள்களை பாதுகாக்கும் வகையில் 25 டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சொட்டுநீர் பாசன மூலம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறவும், விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை வெங்காய சேமிப்பு கிடங்கை தகுதி உள்ள விவசாயிகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா, உதவி இயக்குனர் திவ்யா, உதவி அலுவலர் ஆறுமுகம் உடனிருந்தனர்.
