ADDED : மார் 25, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி, : கொட்டாம்பட்டி வடக்குபுற காளியம்மன் கோயில் 4 நாள் பங்குனி திருவிழா நேற்று துவங்கியது.
முதல் நாளான நேற்று சிவக்களத்தில் உள்ள பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பூ தட்டு சுமந்தும் 4 கி.மீ., துாரத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (மார்ச் 25) கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறும். மார்ச் 26 பூசத்தாய் ஊருணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

