ADDED : மே 11, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கூத்தப்பன்பட்டி நாகம்மாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.23 முகூர்த்தகால் ஊன்றி காப்பு கட்டி பக்தர்கள் விரதமிருந்தனர்.
மே 9 பூத்தட்டு திருவிழாவும், திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று (மே 10) பவ்வாத்தாள் குளத்தில் இருந்து பக்தர்கள் புனித நீராடி பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இன்று (மே 11) கிடா வெட்டி பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.