ADDED : மே 24, 2024 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் காமாட்சி அம்மன் வைகாசி திருவிழா மே 8 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மே 22 கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், விளக்கு பூஜையும் நடந்தது. நேற்று நேர்த்திகடன் வேண்டி கிடைக்க பெற்ற பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பிறகு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
ரதத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மே 24) முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும், அன்னதானத்துடன் திருவிழா நிறைவு பெறும்.