/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்டம் ஒழுங்கு குறித்து மதுரையில் டி.ஜி.பி., ஆலோசனை; இன்று போலீஸ் குறைகளை கேட்கிறார்
/
சட்டம் ஒழுங்கு குறித்து மதுரையில் டி.ஜி.பி., ஆலோசனை; இன்று போலீஸ் குறைகளை கேட்கிறார்
சட்டம் ஒழுங்கு குறித்து மதுரையில் டி.ஜி.பி., ஆலோசனை; இன்று போலீஸ் குறைகளை கேட்கிறார்
சட்டம் ஒழுங்கு குறித்து மதுரையில் டி.ஜி.பி., ஆலோசனை; இன்று போலீஸ் குறைகளை கேட்கிறார்
ADDED : மார் 07, 2025 05:08 AM

மதுரை : சட்டம் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றங்களை தடுப்பது குறித்து மதுரையில் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி., சங்கர்ஜிவால் ஆலோசனை நடத்தினார். இன்று மதுரை, விருதுநகர் போலீசாரின் குறைகளை கேட்கிறார்.
இரண்டு நாள் பயணமாக மதுரை வந்துள்ள சங்கர்ஜிவால், நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, கமிஷனர் லோகநாதன், எஸ்.பி.,க்கள் மதுரை அரவிந்த், விருதுநகர் கண்ணன் மற்றும் துணைகமிஷனர்கள் பங்கேற்றனர்.
அவர் பேசியதாவது: போக்சோ, பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும், சைபர் கிரைம் குற்றங்கள், போதை பொருள் விற்பனையை தடுக்க கவனம் செலுத்த வேண்டும். ரோந்து பணியை விரிவுப்படுத்த வேண்டும். உரிய காரணங்களோடு விண்ணப்பிக்கும் போலீசாருக்கு விடுப்பு அளிக்க வேண்டும். நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். ரவுடிகளை கட்டுப்படுத்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
இதைதொடர்ந்து மதுரை நகர், புறநகர், விருதுநகர் மாவட்டங்களில் பதிவான போக்சோ, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். இன்று மதுரை, விருதுநகர் போலீசாரின் குறைகளை ஆயுதப்படை மைதானத்தில் கேட்கிறார். சிறு சிறு தவறு செய்த போலீசாரின் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய உள்ளார்.
இதற்கிடையே பெரும்பாலான போலீசாரின் குறைகளை தீர்க்கும் வகையில் முன்கூட்டியே அவர்களிடம் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர். அதற்குரிய தீர்வுடன் இன்றைய முகாமை நடத்த உள்ளனர்.