sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் பிறந்த நாள் பேட்டி

/

தினமலர் பிறந்த நாள் பேட்டி

தினமலர் பிறந்த நாள் பேட்டி

தினமலர் பிறந்த நாள் பேட்டி


ADDED : செப் 06, 2024 05:09 AM

Google News

ADDED : செப் 06, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசப்பற்றை வளர்க்கிறது

73 வருடங்களாக தினசரி பத்திரிக்கை செய்திகளில் நடுநிலைமையாகவும் உறுதியாகவும் செயல்படுகிறது. என்னுடைய 17 வயது முதல் 41 வருடங்களாக காலை பொழுது தினமலர் வாசிப்புடன் துவங்குகிறது. முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை மக்களுக்கு பயனுள்ளசெய்திகளை வழங்கும் நாளிதழ் . அரசியல் முதல் மக்களின் பிரச்னை வரை வெளியிட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. அறிவு வளர்க்கும் செய்திகளோடு, தேசப்பற்றையும் வளர்க்கிறது.

பி.எஸ்.ஜி. செல்வ சந்திரகுமார் செயலாளர். தொழில் வர்த்தகசங்கம் சாத்துார்.

அறிவார்ந்த சமூகங்களை உருவாக்குகிறது

கடந்த ஏழு தசாப்தங்களாக தினமலர் நாளிதழ் உண்மை, நேர்மை, பொதுநலனுக்கான தன்னிகரற்ற பணியை வழங்கி வருகிறது. நியாயமான செய்திகள், சிந்தனை பகுப்பாய்வு, விமர்சனங்கள் மற்றும் காலத்தின் பல்வேறு கதைகளுக்கு குரல் கொடுப்பதில் தினமலரின் பொறுப்பான பணி பாராட்டதகுந்தது. பல தலைமுறைகளில் வாசகர்களுக்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.ஷோபனா தேவி இணைப் பேராசிரியர், சிவகாசி

சமரசமற்ற தன்மை

தினமலர் நாளிதழ் செய்திகள் அனைத்து பகுதிகளுக்கான பிரச்னைகளை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி தீர்வு காண்பதுடன், பெரிய பணிகளை சரி செய்வதற்கான ஆரம்ப புள்ளியை துவங்கி வைக்கிறது. வர்த்தகர்களின் பிரச்னைகளையும் உடனுக்குடன் வெளிப்படுத்தி அரசுக்கு இடையே பாலமாக இருந்து வருகிறது. இது போன்ற தொடர் செயல்களால் தினமலர்நாளிதழின் நெடுநாள் வாசகர் என்பதில் பெருமை அடைகிறேன்.

ராதாகிருஷ்ண ராஜா வர்த்தகர், ராஜபாளையம்.

தன்னம்பிக்கையை அதிகரிக்க

தினமலர் நாளிதழ் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம் , தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் செய்திகளை அப்டேட் ஆக வழங்குகிறது. தினமலர் அதன் நம்பகத்தன்மை, நடுநிலை மற்றும் தரமான செய்திகளுக்காக அறியப்படுகிறது. போட்டி தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கம் தரும் போட்டிகளை கையாண்டு வருகிறது. மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. தினமலர் வெளியிடும் கல்வி செய்திகள், நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதின் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ரேஷ்மா, கல்லுாரி மாணவி, அருப்புக்கோட்டை






      Dinamalar
      Follow us