/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தினமலர் வழிகாட்டி நிறைவு
/
மதுரையில் தினமலர் வழிகாட்டி நிறைவு
ADDED : மார் 25, 2024 06:58 AM
மதுரை, : மதுரையில் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகள் வழங்கிய வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் இரண்டு நாட்களாக நடந்த நான்கு கருத்தரங்கு அமர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெற்றோர் பங்கேற்று நிபுணர்களின் உயர்கல்வி ஆலோசனைகளை பெற்றனர். 117 கல்வி நிறுவனங்களின் அரங்குகளை காலை 10:30 மணியில் இருந்து மாலை 6:30 மணிவரை இடைவேளையின்றி பார்வையிட்டு கல்வி நிறுவனங்கள், அங்குள்ள பாடப்பிரிவுகள் குறித்தும் விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான 'பவர்டு பை' பங்களிப்பை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஷ்வ வித்யாலயம் செய்தன. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கே.எம்.சி.ஹெச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்கின.

