ADDED : மார் 29, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : எட்டிமங்கலம் அழகம்மாள் 20 ஆண்டுகளுக்கு முன் இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்திருந்தார்.
மின்வாரியம் மின்கம்பத்தை ஊன்றியதோடு சரி. மின் இணைப்பு வழங்கவில்லை. அதற்கு பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டது.

