ADDED : மே 24, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான், மே 25-
முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவில் மோட்டார் மின்போர்டு பழுதால் பராமரிப்பின்றி குடிநீர் தொட்டி பாழடைந்தது.
இத்தொட்டியை அப்பகுதியினர் பொது சுகாதாரம் உட்பட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். தொட்டி செயல்படாதால் தண்ணீரின்றி தவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சீரமைத்தனர். அதிகாரிகள், தினமலர் இதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
