/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்று நிறைவு இன்று வாய்ப்பை தவறவிட்டால் ஓராண்டு காத்திருக்க வேண்டும்
/
மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்று நிறைவு இன்று வாய்ப்பை தவறவிட்டால் ஓராண்டு காத்திருக்க வேண்டும்
மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்று நிறைவு இன்று வாய்ப்பை தவறவிட்டால் ஓராண்டு காத்திருக்க வேண்டும்
மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்று நிறைவு இன்று வாய்ப்பை தவறவிட்டால் ஓராண்டு காத்திருக்க வேண்டும்
ADDED : ஆக 05, 2024 07:21 AM

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆக.,2 ல் துவங்கிய தினமலர், சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024' வீட்டு உபயோக
பொருட்கள் கண்காட்சியில் மூன்றாவது நாளாக நேற்றும் இது மக்கள்
கூட்டமா, சித்திரை திருவிழாவின் பக்தர்கள் கூட்டமா என வியக்கும் வகையில் ஏராளமானோர் குவிந்தனர்.
குழந்தை, குடும்பத்துடன் வந்த பெண்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை இஷ்டம் போல் வாங்கி குவித்து உற்சாகமாக சென்றனர்.இன்று வாய்ப்பை தவறவிட்டால் இப்படி ஒரு அற்புத ஷாப்பிங் விழாவிற்காக இனி
அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டும். எனவே குழந்தைகளை அழைத்துக்கொண்டு இன்றே ஷாப்பிங் செய்ய கிளம்புங்க மக்களே.
குடும்பத்துடன்குவிந்த பெண்கள்
தினமலர் ஷாப்பிங் என்றாலே அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை இந்தாண்டும் வீண்போகவில்லை. அரங்குகளில் இந்தாண்டும் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
அவர்களுக்கு பிடித்த காஸ்மெட்டிக்ஸ், காட்டன் ஆடைகள், பேன்ஸி பேக்ஸ், டிசைனர் ஜூவல்லரி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், சோபா, கட்டில், ஊஞ்சல்
உள்ளிட்ட பொருட்களை வாங்கி குவித்தனர்.
சுத்திக்கொண்டேசெல்பி எடுக்கலாம்
ஷாப்பிங்கில் பங்கேற்ற இளம் பெண்கள் மறக்காமல் மெஹந்தி வரைந்து கொண்டனர். கேம்ஸ் பகுதியில் இடம் பெற்ற சுழலும் செல்பி பாயின்ட்டில் பெண்கள்,
குழந்தைகள் ஆர்வமாக சென்று செல்பி எடுத்துக்கொண்டனர்.
இசையுடன் ரசித்துருசிக்க புட்கோர்ட்
அரங்குகளை தேடிச் சென்று பொருட்களை வாங்கிக் குவித்த பின் குடும்பத்துடன் புட்கோர்ட்டுக்கு சென்று சிக்கன், மட்டன் பிரியாணி, தயிர் சாதம், பனியாரம், கரும்பு ஜூஸ் என உணவு, குளிர் பானங்களை ஒரு கை பார்த்தனர். மெகா எல்.இ.டி., ஸ்கிரீனில் இசையுடன் பாட்டு கேட்டு பார்த்து ரசித்துக்கொண்டே உணவு அருந்தி உற்சாகமாகினர்.
வழக்கம் போல் போத்தீஸ் கேம் ஸோன் பகுதியில் குட்டீஸ்களின் கூட்டம் அலைமோதியது.
ஆர்வமுடன்ஹேப்பி கார்ஸ் 7
எஸ் ரைடு, எலக்ட்ரானிக்ஸ் பைக், சிக்குபுக்கு ரயில், புல் ரைடு,
ஒட்டக சவாரி என அனைத்தையும் ஜாலியாக விளையாடி மகிழ்ந்தனர்.
மெகா பார்க்கிங்
நுாற்றுக்கணக்கான கார்கள், டூவீலர்கள் பார்க்கிங் செய்யும் வகையில் தமுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போலோ, மீனாட்சி மிஷன் மருத்துவமனைகள் சார்பில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஈ.சி., டெக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் கேமரா மூலம் அரங்குகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இணைந்து கரம் சேர்ப்போர்: அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அண்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் லட்சுமி கிரைண்டர், அல்ட்ரா பெர்பெக்ட், ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ்.
ஏ.ஐ., தொழில்நுட்ப பிரிஜ்
சத்யா ஸ்டாலில், ஒய்யார உயரத்தில் டபுள் டோருடன் ஏ.ஐ., தொழில்நுட்ப பிரிஜ் (சைடு பை சைடு) உள்ளது. டுவின் கூலிங் பிளஸ் சிஸ்டம் டெக்.,. இடதுபுறம் முழுவதும் பிரீசர். பிரிஜ்ஜை திறக்காமலேவெளிப்புறத்தில் இருந்தேஜில் தண்ணீரும், ஐஸ் சீஸ்களும் கிடைக்கும். டிஜிட்டல்
இன்வெர்ட்டர் வசதி உள்ளது.
வைபை மூலம் இயக்கலாம்.
தள்ளுபடியில் ரூ.1.15 லட்சத்தில் கிடைக்கிறது. மல்டி டைமர் குக்கர் முத்து கிரைண்டர் ஸ்டாலில், மல்டி டைமர் குக்கர் புதிய வரவாக உள்ளது. டைம் செட் பண்ணி சமைக்கும்
வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சமைத்த பின் இதில் உள்ள உணவு 4 மணிநேரம் சூடாகவே இருக்கும். டைம் செட் பண்ணிவிட்டதால் மறக்காமல் குக்கரை ஆப் செய்ய வேண்டும் என்ற அவஸ்தை இனி இல்லை. தள்ளுபடியில் ரூ. 5500க்கு கிடைக்கிறது.
காருக்குள் எலி தொல்லையா
காருக்குள் எலி இருந்தால் கிலி தான். அவற்றை விரட்டியடிக்க ஹெர்பல் வகை தயாரிப்புகள் கிடைக்கின்றன. இதுதவிர வீட்டில் கரப்பான், பல்லி, கொசு தொல்லையா, அவற்றையும் விரட்ட கரப்பான், பல்லி,
கொசு விரட்டிகள் கிடைக்கின்றன. விலையில் 25 சதவீதம்
தள்ளுபடி உள்ளது.
சூடாகாத மிக்ஸி
ஆனந்தா அண்ட் ஆனந்தாவில் பிரீமியம் ஜெஸ்டா வகை மிக்ஸி சி.வி.ஏ.சி., டெக்னாலஜியில் வந்துள்ளது. எளிதில் சுத்தப்படுத்தலாம் எல்.இ.டி., இன்டிகேட்டர் வசதி உள்ளது. தொடர்ந்து
பயன்படுத்தினாலும் எளிதில் ஹீட் ஆகாது. தள்ளுபடியில் ரூ.4550க்கு கிடைக்கிறது.