ADDED : ஜூலை 02, 2024 05:56 AM
மதுரை : மதுரை கே.புதுார் அரசு ஐ.டி.ஐ.,யில் 23 தொழிற் பிரிவுகளில் 440 காலியிடங்கள் உள்ளன. இங்கு நேரடி சேர்க்கை ஜூலை 1 முதல் 15 வரை நடக்கிறது.
14 வயது நிறைவு பெற்ற, 8, 10 ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மாற்றுச் சான்றிதழ், 8, 10 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்று, ஆதார் அட்டை நகல், மார்பளவு போட்டோக்கள் 5, ஆகியவற்றுடன் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும். அங்கு பெயரை பதிவு செய்து காலியாக உள்ள பிரிவுகளில் ஓராண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.185, ஈராண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.195 செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணம் ரூ.50.
பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, புதுமைப் பெண் திட்டத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படும். இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 2 செட் சீருடைகள், தையற்கூலி, விலையில்லா ஒரு செட் காலணி, இலவச பஸ் பாஸ், சலுகை உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதியும் உண்டு.
விவரங்களுக்கு 94990 55749 அல்லது govtitimadurai@yahoo.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.