ADDED : ஜூன் 04, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். விவசாயிகளுக்கான ஏ.டி.டி. 54 ரக நெல் விதை, குதிரைவாலி விதை, தார்ப்பாலின் பை, தென்னங்கன்று, தென்னை டானிக் போன்றவற்றை வேளாண் விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன் வழங்கினார். டீன் மகேந்திரன், உழவியல் துறை பேராசிரியர்கள் பேசினர்.