/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்ட பாட்மின்டன் ராங்கிங் போட்டி
/
மாவட்ட பாட்மின்டன் ராங்கிங் போட்டி
ADDED : மே 26, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கருப்பாயூரணி டெம்பிள் சிட்டி பாட்மின்டன் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான பாட்மின்டன் ராங்கிங் விளையாட்டுப் போட்டி நடக்கிறது.
11 வயது, 13, 15 மற்றும் 17 வயது ஆடவர், மகளிர் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நாக்அவுட் போட்டிகளில் 300 பேர் பங்கேறகின்றனர். தலைமை நடுவர் ஜீவக்குமார் போட்டியை நடத்துகிறார். விளையாட்டு கமிட்டி உறுப்பினர் கார்த்திக்ராஜன், மதுரை மாவட்ட பாட்மின்டன் சங்க துணைத்தலைவர் ரமேஷ், பயிற்சியாளர் இளையராஜா கலந்து கொண்டனர். 11, 13, 15, 17 வயது பிரிவுகளில் காலிறுதி போட்டிகள் வரை நேற்று நடந்தது. இன்று (மே 26) அரையிறுதி, இறுதிப்போட்டி நடக்கிறது.