/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்ட பாட்மின்டன் ரேங்கிங் போட்டி
/
மாவட்ட பாட்மின்டன் ரேங்கிங் போட்டி
ADDED : மே 30, 2024 03:39 AM
மதுரை: கருப்பாயூரணி டெம்பிள்சிட்டி பாட்மின்டன் அகாடமி சார்பில் மாவட்ட பாட்மின்டன் ரேங்கிங் போட்டிகள் நடந்தன.
11 வயதுக்குட்பட்டோர் பிரிவு: மகளிர் ஒற்றையர் பிரிவில் மேட்ச் பாயின்ட் கிளப் அக்ஷரா முதலிடம், எஸ்.டி.ஏ.டி. ஹரித்ரா 2ம் இடம் பெற்றனர். பி.என்.எஸ். கிளப் வர்ஷா, அபிராமி குரு கிளப் கெபிரா 3ம் இடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் பி.என்.எஸ். கிளப் அக்ஷரா, வர்ஷா ஜோடி முதலிடம், அதே கிளப் தன்யாஸ்ரீ, தக்ஷனா ஸ்ரீ ஜோடி 2ம் இடம் பெற்றனர். சோமு கிளப் ஜானிதா ஜஸ்டா, திவ்யஸ்ரீ ஜோடி, சாய் கிளப் அனி, தீப்தி ஜோடி 3ம் இடம் பெற்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சூப்பர் சட்லர்ஸ் கிளப் வேதீஸ்வரா முதலிடம், டி.சி.பி.ஏ. கிளப் பர்ஹான் 2ம் இடம் பெற்றனர். சாய் கிளப் சத்யநாராயணன், ஜெனித் கிளப் சச்சின் 3ம் இடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் அஸ்வின், சத்யநாராயணன் ஜோடி முதலிடம், கிருஷ் கார்த்திக், சக்தி சந்தானம் ஜோடி 2ம் இடம் பெற்றனர். சபரி தேவ், சாய் சிவா ஜோடி, கிருஷ்ணதேவ், கிருஷ்ணவ் ப்ரவீத் ஜோடி 3ம் இடம் பெற்றனர்.
13 வயது பிரிவு: மகளிர் ஒற்றையர் பிரிவில் மேட்ச் பாயின்ட் வீராங்கனைகள் நிகாரிகா முதலிடம், அக்ஷரா 2ம் இடம், அப்சனா, ரக்ஷிதா 3ம் இடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் நிகாரிகா, ரக்ஷிதா ஜோடி முதலிடம், அப்சனா, அக்ஷரா ஜோடி 2ம் இடம் பெற்றனர். தீக்ஷா, தனீஷா ஸ்ரீ ஜோடி, ஆஷி, யோபிகா ஜோடி 3ம் இடம் பெற்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெனித் கிளப் அப்துல்லா முதலிடம், மேட்ச் பாயின்ட் நரேந்திரநாத் 2ம் இடம் பெற்றனர். தயா கிளப் ஹமீம் முகமது, எழில்குமரன் 3ம் இடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் அப்துல்லா, பால் பில்லி ஜோடி முதலிடம், நரேந்திரநாத், வீர் அர்ஜூன் ஜோடி 2ம் இடம் பெற்றனர். எழில்குமரன், ஹமீம் முகமது ஜோடி, நிஷி பவிதன், அபிஜித் ஜோடி 3ம் இடம் பெற்றனர்.
15 வயது பிரிவு: மகளிர் ஒற்றையர் பிரிவில் மேட்ச் பாயின்ட் கிளப் யாழினி முதலிடம், நிகாரிகா இரண்டாம் இடம் பெற்றனர். பீஸ் கிளப் மான்யா, எஸ்.டி.ஏ.டி., ஷிவானி 3ம் இடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் நயோனிகா, யாழினி ஜோடி முதலிடம், லாரா, ஷிவானி ஜோடி 2ம் இடம் பெற்றனர். லியா ஜோகனா, தேஜூ ஹஸ் ஜோடி, ஜோஸ்னா, நியாந்தா ஜோடி 3ம் இடம் பெற்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெனித் கிளப் அப்துல்லா முதலிடம், எஸ்.டி.ஏ.டி., சுதன் இரண்டாமிடம் பெற்றனர். ஆர்.பி.ஏ. ஆரோன் ஆன்டனி, மேட்ச் பாயின்ட் வீர் ஆர்யன் 3ம் இடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் பிரபாகரன், வீர் ஆர்யன் ஜோடி முதலிடம், ஹயகிரீவ், விஷ்ணு பிரபாகரன் ஜோடி 2ம் இடம் பெற்றனர். ஸ்ரீபிரசன்னா, சஞ்சீவன் ஜோடி, நரேந்திரநாத், தக்ஷின் ப்ரனேஷ் ஜோடி 3ம் இடம் பெற்றனர்.
17 வயது பிரிவு: மகளிர் ஒற்றையர் பிரிவில்தயா கிளப் தான்யா முதலிடம்,மேட்ச் பாயின்ட் கிளப் நயோனிகா இரண்டாமிடம், ஆர்.பி.ஏ., கிளப் கைனெத் ரெனி ஆன்டனி, மோஹிதா ஸ்ரீ மூன்றாமிடம் பெற்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் மேட்ச் பாயின்ட் கிளப்பின் நயோனிகா, யாழினி ஜோடி முதலிடம் பெற்றனர். சாய் கிளப் தேவதர்ஷினி, ஜோஸ்னா ஜோடி இரண்டாமிடம், ஆர்.பி.ஏ. கிளப் கைனெத் ரெனி ஆன்டனி, மோஹிதா ஸ்ரீ ஜோடியும், அபிராமி குரு கிளப்பின் ஹரினி, மஹிமா ஜோடி மூன்றாம் இடம் பெற்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் தயா கிளப் சச்சின் முதலிடம் பெற்றார். ஜெனித் கிளப் அபிஜய் இரண்டாமிடம், அபிஉதய், தயா கிளப் ஜெனோ ரீகன் மூன்றாமிடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் தயா கிளப் அபிஜித் கண்ணா, ஜெனோ ரீகன் ஜோடி முதலிடம், கெவின் அபிநவ் ராஜ், சச்சின் ஜோடி இரண்டாமிடம் பெற்றனர். அபிராமி குரு கிளப் சிவபாலன், விக்னேஷ்வர் ஜோடி, ஜெனித் கிளப் அபிஜய், அபிஉதய் ஜோடி மூன்றாமிடம் பெற்றனர்.