நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை கோவில்பட்டிக்கு இடமாற்றப்பட்டார். இவருக்கு பதில் பரமத்திவேலுாரில் பணியாற்றிய பிரபாகரனும், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக மணிகண்டனும் நியமிக்கப்பட்டனர்.
நீதிபதி மாரிக்காளைக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் நீதிபதி தினேஷ்குமார், அரசு வழக்கறிஞர்கள் தங்கசாமி, விஜய், முன்னாள் அரசு வழக்கறிஞர் சம்பத், வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவொளி, துணைத் தலைவர் கண்ணன், இணைச்செயலாளர் விஜய், பொருளாளர் தினேஷ்பாபு பங்கேற்றனர்.