/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., அரசு தோற்றுப்போய்விட்டது: கள்ளச்சாராயத்தை கண்டித்து நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கொதிப்பு
/
தி.மு.க., அரசு தோற்றுப்போய்விட்டது: கள்ளச்சாராயத்தை கண்டித்து நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கொதிப்பு
தி.மு.க., அரசு தோற்றுப்போய்விட்டது: கள்ளச்சாராயத்தை கண்டித்து நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கொதிப்பு
தி.மு.க., அரசு தோற்றுப்போய்விட்டது: கள்ளச்சாராயத்தை கண்டித்து நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கொதிப்பு
ADDED : ஜூன் 25, 2024 06:29 AM

மதுரை : ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் உட்பட எல்லா வகையிலும் தி.மு.க., அரசு தோற்று போய்விட்டது'' என மதுரை பேச்சியம்மன் படித்துறை ஆறுமுகசந்தியில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கொதித்தெழுந்தனர்.
போலீஸ் மீது நம்பிக்கை இல்லை
தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ்சத்யன், மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் ஆர்ப்பாட்டம் நோக்கம் குறித்து பேசினர். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா பேசுகையில், ''கள்ளக்குறிச்சிக்கு முதல் ஆளாக பழனிசாமி சென்றபிறகுதான் பிற எதிர்க்கட்சிகளுக்கு கண் தெரிந்தது. முதல்வர் ஸ்டாலின் இதுவரை அங்கு செல்லவில்லை. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸ் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
சி.பி.ஐ., விசாரணை வேண்டும். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்பு உடைய தி.மு.க.,வினர் கைது செய்யப்படவில்லை'' என்றார்.
கோர்ட் அவமதிப்பு ஆகாதா
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசுகையில், ''சி.பி.ஐ., விசாரணை கேட்டு கோர்ட்டில் அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி 'சி.பி.ஐ., விசாரணை தேவை இல்லை' என்று கூறுவது கோர்ட் அவமதிப்பு ஆகாதா. மக்கள் உயிர்காக்கும் பிரச்னை குறித்து சட்டசபையில் முதலில் பேச முதல்வர் அனுமதித்து இருக்க வேண்டும்.
கடந்தாண்டு மரக்காணத்தில் விஷச்சாராயத்திற்கு 23 பேர் இறந்தனர். சி.பி.சி.ஐ.டி., விசாரித்த அந்த வழக்கு இதுவரை நிலுவையில் உள்ளது. போலீஸ் மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்'' என்றார்.
வெட்ககேடானது
மதுரை நகர் செயலாளர் செல்லுார் ராஜூ பேசுகையில், ''தமிழகத்தில் வயது வித்தியாசமின்றி போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் அரசு நிவாரணம் தருவதால், புதைத்த உடலை தோண்டி கள்ளச்சாராயத்தால் இறந்தாரா என மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இது வெட்ககேடானது.
கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் புதுச்சேரி, தெலுங்கானாவில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
அம்மாநிலங்களில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க முடியாது என்பதால்தான் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம். எல்லா வகையிலும் தி.மு.க., அரசு தோற்று போய்விட்டது'' என்றார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன் நன்றி கூறினார்.